நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காதி கிராப்ட் நிறுவனத்தின் சார்பில் அவனுள் அவள் திருநங்கையருக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பனைப் பொருள்கள் விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 26
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காதி கிராப்ட் நிறுவனத்தின் சார்பில் அவனுள் அவள் திருநங்கையருக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பனைப் பொருள்கள் விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை அங்காடி பாரம்பரியமிக்க பனைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கமாகவும் பொது மக்களிடையே பனை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விற்பனை அங்காடியினை அவனுள் அவள் திருநங்கையர் சுய உதவி குழு உறுப்பினர் வி. மாசிகா என்கிற திருநங்கை நிர்வகிக்கிறார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக கடைவசூல் செய்து வந்தவர். இவரோடு சேர்ந்து மேலும் 15 திருநங்கையருக்கு கோரோட் அறக்கட்டளை மனநலம் மற்றும் தொழில் முனைவிற்கான பயிற்சியினை மாவட்ட தொழில் மையத்தில் கடந்த மாதம் 8 நாட்களுக்கு வழங்கியது. இப்பயிற்சியின் முடிவில் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களது கோரிக்கைகளை கேட்டறியப்பட்டுஇ தமிழ்நாடு அரசின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்த விற்பனை அங்காடி திருநங்கையரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் ஓர் முன்முயற்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் கருப்பட்டி காப்பி. கருப்பட்டி டீ சுக்கு காப்பி பழ ஜுஸ்இ கரும்பு சாறு போன்றவற்றை விற்பனை செய்யப்படும். இவரது விற்பனை மையத்திற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மானிய கடன் வழங்க முன்வந்துள்ளது. துவக்க நிதியாக மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ. 25000 வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது சு.ராமன் காதி கிராப்ட் நிறுவன உதவி இயக்குநர் பிரான்சிஸ் தெரசா மேரி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆர்.ரமணி மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.அம்பிகா கோரோட் அறக்கட்டளை நிர்வாகி எம்.பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

