தூத்துக்குடி
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் அதிமுக ஒபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகள் உருவாகி அதன் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்கள் வரை சென்று தற்போது உச்சநீதிமன்றம் இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்ற சில வழக்குகளும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் இபிஎஸ் அணி போட்டியிட்டதால் பலரும் அந்த அணியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையேற்று ஓபிஸ் அணி நாசரேத் நகரசெயலாளர் சாது இம்மானுவல் சிதம்பரநகரில் உள்ள அதிமுக அமைப்பு கழக அலுவலகத்தில் மாநில அமைப்பு செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியனை சந்தித்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார்.
ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ராம் கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், போக்குவரத்து தொழிற்சங்க முன்னாள் மண்டல இணைச்செயலாளர் சங்கர், கனிராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.

