வேதாரணியத்தில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சதுரங்கப் போட்டி.
வேதாரணியம் மார்ச் 6
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தூய அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க .ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மா.மீ அறக்கட்டளை,வேதை நகர திமுக, இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம் வாய் மேடு,நாகப்பட்டினம் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.முன்னதாக காலையில் சதுரங்கப் போட்டியை வேதாரணியம் நகர மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி தொடக்கி வைத்தார்.இந்த சதுரங்க போட்டியில் மொத்தம் 510 பேர் கலந்து கொண்டனர்.



பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் மெடல் வழங்கப்பட்டன.உடன் வேதாரண்ய நகர மன்ற தலைவர் மா.மீ.
புகழேந்தி, பள்ளித்தாளாளர் நித்தியசகாயராஜ் ,திமுக கிழக்கு,மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம்,உதயம் முருகையன், வேதாரணியம் வர்த்த சங்கத் தலைவர் எஸ். எஸ். தென்னரசு , மா.மீ.அறக்கட்டளையின் சார்பில் மா.மீ.முத்துலட்சுமி,மா.மீ. அன்பரசு,புயல் குமார் என்கிற சு.தட்சிணாமூர்த்தி,வேதாரணியம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

