தமிழகத்தில் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் நபர்களுக்கு தமிழககுரல் என்ற தனியார் செய்தி நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன் அடிப்படையில் 2023-க்கான தமிழகத்தின் நம்பிக்கை நாயகி விருது சமூக சேவைக்காக உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் நாணல்காடு சிவ. உமாதுரைச்சி தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழககுரல் என்ற தனியார் செய்தி நிறுவனம் சார்பில் விருது வழங்கிப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
சிறந்த சிவ பக்தரான இவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அமைந்துள்ள நாணல்காடு கிராமத்தைச் சார்ந்தவர் ஆவார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபடுபாடு கொண்டு, சிவனடியார்களுடன் இணைந்து பல்வேறு உளவார பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தனியாகச் சென்று சிவதொண்டு ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடுகளை வினோத் குமார், சுதர்சனா மற்றும் தமிழக குரல் செய்தி நிறுவனத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

