வேதாரணியம் அடுத்த கருப்பம்புலம்
அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
வேதாரணியம் ஜனவரி 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த கருப்பம்புலம்
அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழா 28.01.2023 சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் முதல்வர் வெற்றி செல்வி
வரவேற்புரை ஆற்றினார் .பள்ளியின் தாளாளர் பி.வி.ஆர். விவேக் வெங்கட்ராமன்
விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.புதுக்கோட்டை தாஜ்மஹால் கம்பெனீஸ் சபீர் முன்னிலை வகித்தார் .சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி .ராஜேந்திரன்கலந்துகொண்டு
சிறப்புரையாற்றினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மேலும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சிலம்பு பயிற்சி அளிப்பவரும் செட்டிப்புலம் சோமசுந்தரம் குழுவினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் பள்ளியின் செயலாளர் மகேஸ்வரி விவேக் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

