நாகப்பட்டினம் மாவட்டம்
சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத்தலைவர் உ.மதிவாணன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் ஜனவரி 28
நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத்தலைவர் உ.மதிவாணன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது,
தகுதியான இளைஞர்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இளைஞர் திறன் திருவிழாவானது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகும்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் உள்ளது. அதனை சரியான முறையில், சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அனைவருக்கும் உண்டு. எனவே அனைத்து இளைஞர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்ட 3674 நபர்களில் 978 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்ய்ப்பட்ட நபர்களுக்கு தொழில் திறன் சேர்க்கை சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் விபி.நாகைமாலி ஆகியோர் வழங்கினர்.
இவ்விழாவில் 33 நபர்களுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு கடனாக ரூ.14,10,000 தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரிதிவிராஜ்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஹேமலதா, உதவி திட்ட அலுவலர்கள் பா.பாலன், சீனிவாசன், முருகேசன் அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

