மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திருச்செந்தூர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை இன்று 30.12.22 வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி அவர்கள்,திருச்செந்தூர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.அருள் முருகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

