மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் டிசம்பர் 29
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதனை, தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்குதல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறும் அதே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்விழாவை காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க திட்டமிடப்பட்டதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் அவர்கள் மாநில அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 831 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.33.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புத் தொகையையும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் வங்கிப் பெருங்கடன், 209 குழுக்களுக்கு திட்ட நிதியிலிருந்து சமுதாய முதலீட்டு நிதி ரூ 2.29 கோடியையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 8 ஊராட்சிகளுக்கு இணை மானிய திட்டம் ரூ. 0.28 இலட்சம் என மொத்தம் ரூ. 43.10 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் பணியில் 2021-22 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளான நாகப்பட்டினம் இந்தியன் வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கி விருது, எட்டுக்குடி கிளை இந்தியன் வங்கி சிறந்த வங்கி கிளை முதலிடத்திற்கு பரிசுத்தொகை ரூ. 15,000 நாகப்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறந்த வங்கி கிளை இரண்டாமிடத்திற்கு பரிசுத்தொகை ரூ. 10,000 வலிவலம் கனரா வங்கி சிறந்த வங்கி கிளை மூன்றாமிடத்திற்கு பரிசுத்தொகை ரூ. 5000 திட்டச்சேரி மற்றும் .வேளாங்கண்ணி இந்தியன் வங்கிக்கு சிறப்பு பரிசுகளையும் மற்றும் கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வேஇக்கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)நிர்வாகம் முருகேசன், மகளிர் சுய உதவி குழுக்கள், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

