• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் ஜனவரியில் சாலை பணிகள் முழுமையாக தொடங்கும் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

policeseithitv by policeseithitv
December 29, 2022
in Uncategorized
0
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் ஜனவரியில் சாலை பணிகள் முழுமையாக தொடங்கும் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அதிமுக எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தகவல் வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என்ன நிலையில் இருக்கிறது. மக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார்.
மேயர் ஜெகன் பெரியசாமி: மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலையில் உள்ளன. சுகாதார அதிகாரிகளும், மக்கள் நலன் கருதி விழிப்புணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.
மகேஸ்வரி, திமுக: எங்களது பகுதியில் கால்வாய், சாலைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
மேயர்: வார்டு எண் 22, 23, 24, 25 உள்ளிட்ட 5 வார்டுகளில் உங்களது கோரிக்கை பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்று கூறியதோடு, உதவி செயற்பொறியாளர் பணிகளை மேற்கொள்வதாக கூறினார்.
திமுக கவுன்சிலர்கள்: பொண்ணப்பன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், சுப்புலெட்சுமி ஆகியோர் மேயர், ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திமுக கவுன்சிலர் வைதேகி பேசுகையில் எங்கள் பகுதியில் உப்பள தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அவர்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும் என்றார். மேயர்: அரசு விதிகளின் படி என்ன சலுகைகள் அளிக்கமுடியோ அதை மாநகராட்சி நிறைவேற்றும் என்றார்.
திமுக கவுன்சிலர் இசக்கிராஜா: தங்களது பகுதியில் நடைபெற்ற பணிக்கு நன்றி தெரிவித்தும், சில பணிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேயர்: உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள்: தங்களது பகுதியில் குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகுகிறது. அதை பழுது செய்து சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையுடன் சில பணியை முன்வைத்தார். மேயர்: இதுபோன்ற குறைகளை எனக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். தினசரி குடிநீர் வழங்குவதால் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ்: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மாநகராட்சி பகுதிகளில் 4500 சாலைகள் உள்ளன. அதில் எது முக்கியமானது என்று கருதி முதல் கட்ட பணிகள் ஜனவரி பிறந்ததும் 60 வார்டு பகுதிகளிலும், புதிய தார் சாலை அமைக்கப்படும். கால்வாய்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. பக்கிள் கால்வாய் இருந்தாலும், புதிய கால்வாய் தேவை என்கிறபட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும். பொங்கல் திருநாளை பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவதற்கு பூங்காக்கள் சீர்செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும். அனைத்து பணிகளையும் முழுமையாக எல்லா பகுதிகளுக்கும் செய்து கொடுக்கப்படும் என்றார்.
மாநகராட்சிக்குட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு, அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பழைய பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், சரவணக்குமார், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துமாரி, அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரண்யத்தில் தேசிய நுகர்வோர் தின விழா

Next Post

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்  ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In