வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் அளித்தார்.
வேதாரணியம் டிசம்பர் 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த ஆற்காடு துறைக்கு ஆய்வு செய்ய வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில்
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஜபருல்லா
பூண்டி கலைவாணன்,
சிந்தனைச் செல்வன் மற்றும்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் அடங்கிய குழுவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன்,
வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர் மற்றும் வியாபாரியின் சங்கத் தலைவர்,
குருகுலம் அறங்காவலர் கயிலை மணி என்று அழைக்கப்படும் ஏ. வேதரத்தினம்,
வேதாரணியம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமன் கோவிந்தராஜ்,
நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், INTUC உப்பு தொழிற்சங்க துணைத் தலைவர் தங்கமணி, புலவர் கணேசன், செல்வகுமார் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள்
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அளிக்கப்பட்ட
மனுவில்
1. சுமார் 2424 ஏக்கர் வேதாரணியம் உப்பள நிலங்களை வேதாரண்னேஸ்வரர் தேவஸ்தானத்தில் இருந்து நிரந்தர குத்தகை உரிமை பெற்று வெகு சொற்ப ரூபாய் 4000
குத்தகை தொகையினை மத்திய அரசு உப்பு இலாகா கோயிலுக்கு அளிக்கின்றது.
ஆனால் உப்பள நிலங்களை மீள்
குத்தகைக்கு விட்டு உப்பள லைசன்ஸ் தாரர்களிடமிருந்து கூடுதல் தொகை பெறுகிறது.மத்திய அரசு உப்பு இலக்காவை நிறுத்தி விடுவதாக செய்திகள் வெளியாகின்றன. அப்படியானால் இந்த உப்பளங்களை மீண்டும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கே திரும்ப பெற தாங்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
2. புதிதாக அகல ரயில் பாதை திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன் பள்ளி வரை அமைக்கப்பெற்று போக்குவரத்து தொடங்க இருக்கின்றது.
அகஸ்தியம்பள்ளி ரயில் நிலையத்திற்கு சர்தார் வேதாரத்தனம் அவர்களின் பெயரினை சூட்டி சிறப்பிட மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்திட வேண்டுகிறோம்.
3. வேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடம்,மேலவீதி ராஜாஜி பூங்கா,
அகஸ்தியம்பள்ளி உப்பு இலாக்கா நீதிமன்ற அறை,
நீதிமன்ற சிறை,உப்பு அள்ளிய இடத்தில் உள்ள நினைவுத்தூண்,
வேதாரணியம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தில் அமைந்துள்ள சர்தார் அ, வேதாரத்தினம் அவர்களின் நினைவிடம்,தியாகிகளின் சிலைகள் மற்றும் நினைவு தூண்கள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களை மேம்படுத்தி தர தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்திட வேண்டுகிறோம்.
4. திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை வரை மீட்டர்கேஜ் ரயில் பாதை முன்னர் இருந்தது .புதிய அகல ரயில் பாதை மாற்றம் திட்டத்தில் அகஸ்தியம்பள்ளி கோடியக் கரை ஆறு கிலோமீட்டர் ரயில் பாதை விடுபட்டிருக்கின்றது.கோடியக் கரை கடல் வழியாக ஸ்ரீலங்காவின் காங்கேசன் துறைக்கு 19 மைல் தொலைவில் அமைந்திருக்கின்ற இந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இடம் ஆகும். இந்திய பாதுகாப்பு கருதியும் ஆதி கேது என்ற கடல் குளிப்புத் துறை பக்தர்களுக்கு உபயோகமாக இருக்கும் காரணத்தாலும் இந்த ஆறு கிலோமீட்டர் மீட்டர் கேஜ் ரயில் பாதை நிலம் ரயில்வே அமைச்சகத்தின் உடமையாக இருப்பதாலும் இந்த அகஸ்தியம்பள்ளி டு கோடியக்கரை அகல ரயில் பாதை நீடிப்பு என்பது மிக அவசியமாகிறது.
மேற்கண்ட கோரிக்கைகள் கூறப்பட்டிருந்தது. இதை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவினர் இந்தக் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வரிடம் அளித்து கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக கூறினர்.முன்னதாக ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த பொது கணக்கு குழுவினருக்கு
மேளதாளத்துடனும்,வெடி முழக்கத்துடனும் வேதாரணியம் காங்கிரஸ் தொண்டர்களால்
வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

