• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

policeseithitv by policeseithitv
December 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம் டிசம்பர் 28

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களான ம.சிந்தனை செல்வன் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பூண்டி கலைவாணன் அவர்கள், தலைமை செயலக செயலாளர் திரு. முனைவர் கி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு, தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து, வேதாரண்யம் ஒன்றியம் ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி அவர்கள் உள்ளனர். கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயப்பெருமக்களின் நலனுக்காக ஆள்பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவினை குறைத்திடுவதற்கு நவீன தொழில் நுட்பங்களை வேளாண்மையில் கொண்டுவரும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவை தெளிப்பதற்கு ஏதுவாக பயன்படுத்தப்படும் செய்முறை விளக்கத்தினையும், நெல்வரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி, தீமை தரும் பூச்சிகள் குறையும் இதனால் விவசாயிகளின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதை தொடர்ந்து சாகுபடி செய்ய 50 சத மானியத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதைகள் வழங்கப்பட்டு நெல் வரப்பில் பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் 80சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2021-22 ஆண்டில் 29 பஞ்சாயத்து கிராமங்களிலும், 2022-23 ஆண்டில் 51 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் நீர்வள ஆதாரங்களை பெருக்குதல் போன்றவை ஆகும். மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் வேளாண் உபகரணங்கள், ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் , வேளாண்மை துறை சார்பில் 100 சத மானியத்தில் தென்னங்கன்றுகள், புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100 சத மானியத்தில் மரக்கன்றுகள், நெல்லுக்குப்பின் பயறு வகைகள் சாகுபடி திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் உளுந்து மற்றும் பயறு விதைகள் மற்றும் ரபி பருவத்தில் எள் சாகுபடி செய்ய 50 சத மானியத்தில் எள் விதைகள் போன்ற இடுபொருள்கள்களை வழங்கினார்கள்.அதனைத்தொடர்ந்து, கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், வேதாரண்யம் ஒன்றியம், ஆறுக்காட்டுத்துறை கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று மீனவ கிராமங்களில் சுமார் 2290 மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தற்போது 64 விசைப்படகுகளும், 376 நாரிழை படகுகளும் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவற்றை தடுக்கும் வகையில் ஆறுக்காட்டுத்துறை கிராமத்தில் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சுமார் 100 விசைப்படகுகள், 500 நாரிழை படகுகளும் நிறுத்தும் வசதி கொண்ட மீன்பிடி துறைமுகம் ஆறுக்காட்டுத்துறை கிராமத்தில் ரூ150 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் திருக்குவளை வட்டத்தில் 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 20 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், மற்றும் 30 பயனாளிகளுக்கு முருங்கை கன்றுகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தலைமை செயலக சார்பு செயலாளர் ஜெ.பாலசீனிவாசன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) ராஜாராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார். விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடலையாண்டி கோரிக்கை

Next Post

வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் அளித்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் அளித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In