நாகப்பட்டினம் டிசம்பர் 1
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றன.பொதுவாக எயிட்ஸ் நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதிக்கபடாத இரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி, தாயிடமிருந்து குழந்தைக்கு போன்றவற்றின் மூலம் பரவக்கூடிய உயிர்க்கொல்லி நோயாகும். இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும். காசநோய் உள்ள அனைவரும் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஹெச்.ஐ.வியும், காசநோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். நம் மாவட்டத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவ மனைகளில் இரத்த வங்கி செயல்பட்டு அரிய இரத்த வகைகளும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. அதுபோல் ஹெச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் தொற்றின் அளவை தெரிந்துக்கொள்ள சிடி4 கருவி மூலம் பரிசோதனை செய்து கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. தொடர் சிகிச்சை பெறுவதன் மூலம் ஆயுட் காலத்தை நீடித்துக்கொள்ளலாம். தொற்று பாதித்தவர்களை மற்றவர்கள் அன்போடும் அரவணைப்போடும் சக மனிதர்களாக கருதி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதி மொழியினை எடுத்துக்கொண்டு எயிட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வி.விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.ஜோ.ஜோஸ்பின் அமுதா, துணை இயக்குநர் (காசநோய்) மரு. ப.சங்கீதா, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.எஸ்.சங்கரி, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, கூட்டு மருந்து சிகிச்சை அலுவலர் மரு.எஸ்.கார்த்திக், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் கே.சக்திவேல், இயக்குநர் ஆலயம் பவுன்டேசன், இ.ஜி.எஸ்.பிள்ளை மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.பாபு ஆனந்த், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

