தூத்துக்குடி, டிச, 1
மாப்பிள்ளையூரணி கூட்டுறவு நகர கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சண்முகராஜ் என்பவர் பணியின் போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உயிர் இழந்தார்.
ஆதலால் கருணை அடிப்படையில் அவரது மகன் ராகவிஸ்வா என்பவருக்கு நியாய விலைக் கடையின் ஊழியராக பணியாற்ற கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.
இந்த பணி நியமன ஆணையை ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு நகர கடன் வங்கி தலைவருமான சரவணக்குமார் ஆகியோர்கள் வழங்கினார்கள்… இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் சேவியர், அந்தோணிதனுஷ்பாலன், கூட்டுறவு சங்க துணை தலைவர் சிவகுமார், கூட்டுறவு சங்க செயலர் காமராஜ் செயலாளர் பாலமுருகன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா தங்கமாரிமுத்து முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மற்றும் மாரியப்பன் கிளைசெயலாளர் வேல்ராஜ் கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
செய்தி தொகுப்பு: எம்.கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்

