சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த அமைப்பின் 73 வது தமிழ் தாய் பெருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் வருகை புரிகின்றனர் தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது இந்த விழாவை முன்னிட்டு, அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அகராதி, அரிய நூல்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிப்ரவரி முதல் மார்ச வரை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம். இணையவழியிலும் கட்டணம் செலுத்தி நூல்களைப் பெறலாம். தமிழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தள்ளுபடி விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு 044-22542992, 22540087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

