தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மே 24ம் தேதியுடன் தமிழக சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், டில்லியில் இன்று (பிப்.,26) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் அட்டவணை:
வேட்புமனு தாக்கல் துவக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
சட்டசபை தேர்தல் தேதி: ஏப்ரல் 6
ஓட்டு எண்ணிக்கை: மே 2
தமிழகத்தில் மொத்த வாக்குச்சாவடிகள்: 88,936


