வேதாரண்யத்தை அடுத்த கரியப்பட்டினம் மேலக்காடு கோட்டகம் பகுதியில் நாரையை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த நபருக்கு அபராதம்.
வேதாரண்யம் நவம்பர் 24
திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர்கள், ராமதாஸ், செல்வி மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி இலக்கியா வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பண்டியன் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று காலை கரியாப்பட்டினம் நடுக்காடு கோட்டகம் பகுதியை தணிக்கை செய்கையில் கோட்டக பகுதியில் நாரைகளை பிடிக்க கண்ணி ஊன்றி பிடிக்க முயற்ச்சித்த ஜெயக்குமார் த/பெ வடிவேல்-(வயது 40 )என்ற நபரினை பிடித்து விசாரணை செய்து நாரை பிடிக்க முயற்சித்தமைக்காக இந்திய வனஉயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி வழக்குபதிவு செய்யப்பட்டு வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி இணக்க கட்டணமாக (அபராதம்) ரூ25000/= வேதாரண்யம் வனச்சர அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

