• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.  

policeseithitv by policeseithitv
November 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 24

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ. மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அரசானது தமிழுக்கும், தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் “தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக கவிஞர் சுரதா, பேராசிரியர் சி. இலக்குவனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி,தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அண்ணல் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நினைவு போற்றும் வகையில் நடத்தப்பட்ட இலக்கியம்,பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி, மீன்வளப் பொறியியல் கல்லூரி துணை வேந்தர் சுகுமார், நாகப்பட்டினம் நகர மன்றத்தலைவர் இரா.மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த கரியப்பட்டினம் மேலக்காடு கோட்டகம் பகுதியில் நாரையை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த நபருக்கு அபராதம்

Next Post

டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Post
டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In