நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
வேதாரண்யம் நவ 23
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே, மக்களைத் தேடி எல்லாம் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசும, அரசு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டதற்கிணங்க அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றது.
அவ்வாறு தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்
மேலும் இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணிக்கும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 .லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணையினையும், ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணையினை வழங்கப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர்கள் தனது மகன் மற்றும் மகள் 18 வயது பூர்த்தியடையாமல் அவர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடுதிரை செல்போன் பயன்படுத்த வாங்கி கொடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். தங்களது குழந்தைகள் போதை பொருட்கள், செல்போன், இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது கண்காணித்து அறிவுரை வழங்கவும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிவித்து புரிய வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்


இம்முகாமில் மாற்றுத்திறனாளி நலத் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.59,150 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.6,87,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டிலும், மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.67900 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.64,480 மதிப்பீட்டில் மா கன்று, காய்கறி விதைத்தளைகள் கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு போன்றவைகளையும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.28,89,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.14,140 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 இலட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி;.ஷகிலா வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.மை.ஜெயராஜ பௌலின், ஊராட்சிமன்ற தலைவர் சத்தியகலா செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் , மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

