நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் இன்று எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 17
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுவதனை தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்கான என்னை ஒப்படைத்துக் கொள்வேன், மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன், சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன். எனவும் உளமாற உறுதி கூறுகிறேன். என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

