நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரஜெ.முகமது ஷா நவாஸ் உடன் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் உடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் அமைந்துள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று தொடங்கி வைக்கப்பட்டு கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறும்.மேலும் இந்த புதிய சுகாதார கட்டடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.விஜயகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

