தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்!!
தேனி,செப்,5
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு புதிய பிஆர்ஓ-வாக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிர்வாக நலன் கருதி, தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த ஜெகவீர பாண்டியன் அங்கிருந்து இடமாற்றம் செய்து தேனி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நாகராஜ பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக
நவீன் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் சேலத்திற்கு மாற்றப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக
சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக
பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்ட
ஜெகவீரபாண்டியன், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர். இந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் சுமூகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றினார். பத்திரிகையாளர்களுக்கு ஒரு இணைப்பு பாலமாக இருந்து அரசின் செயல் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனுக்குடன் எடுத்து சென்றுள்ளார். இதனால் இவர் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாவட்ட நிர்வாகம், மற்றும் பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டியது உண்டு. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகளை பாரபட்சமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படக்கூடிய நபர் என ஜெகவீரபாண்டியன் பிஆர்ஓ வை
இவர் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் பாராட்டிய நிகழ்வுகள் உண்டு
மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திரிகையாளர்களிடம் நற்பெயர் பெற்று வரும் ஜெகவீரபாண்டியன்
ராஜபாளையம், வில்லிவாக்கம் போன்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுப்பு-வின் மகன் ஆவார்.
இவர் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக 2 வது முறையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு தேனி மாவட்ட
ஏபிஆர்ஓ,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தேனி புதிய பிஆர்ஓ ஜெகவீரபாண்டியன் பணி மென்மேலும் சிறக்க போலீஸ் செய்தி நியூஸ் சேனல் குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்!!

