நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவாஸ் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் 4.0 க்கான கட்டடம் கட்டும் பணிக்கான அரசாணை எண்: 14 தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நாள்: 09.02.2022 மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.373.00 இலட்சத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைத்தளத்தில் மட்டும் 982.25 ச.மீ பரப்பளவில் (10569.01 ச.அடி) அமைந்துள்ளது. இக்கட்டடம் இயந்திரவியல் பணிமனைகள், நான்கு வகுப்பறைகள், கலந்தாய்வு அறை, பணியாளர் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இல.ஜெயமூர்த்தி பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி உதவி பொறியாளர் எம்.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

