திருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் வேலாண்டி (52). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து வேலாண்டியை கைது செய்தார்.
