காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து வாலாஜாபாத் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி கடந்த நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 04/02/2021 காலை காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டார் விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், அவர்கள் முன்னாள் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத்
மனோகரன் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் அக்ரி நாகராஜன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தென்னேரி என்.எம். வரதராஜுலு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் எஸ்.எஸ்.ஆர். சத்யா, ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு வாலாஜாபாத் பகுதியில் அதிமுகவினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பேனர்கள் போஸ்டர்கள் வைத்து அசத்தினார்

