கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் மகளிர் தொண்டு நிறுவனங்கள் துவக்க நாள் விழா
வேதாரண்யம் பிப் 7
வேதாரண்யத்தில் முதன் முதலில் பெண்களுக்கான தனியாக ஒரு பள்ளியை ஒரு மாணவியுடன் துவக்கிய கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் சமூகம் துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் இளைய மாணவி ஸ்ரீநிதி தலைமை வகித்தார்.
இந்த மகளிர் தொண்டு நிறுவனங்களின் கீழ் தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி நடுநிலைப் பள்ளி, கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் உதவி தொடக்கப் பள்ளி, கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் மேல்நிலைப்பள்ளி, ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதி, பசுமடம் (பசு பண்ணை), ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
கடந்த 07.02.1946ல் சர்தார் வேதரத்னம் பிள்ளையால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல பெண்களுக்கு சுயத்தொழில் அறிவையும், சமூக சிந்தனையும் ஊட்டி இன்று 75 ஆண்டுகள் முடிந்து, 76ஆம் ஆண்டு துவக்க நாள் விழா சிறப்பாக பள்ளியின் இளைய பெண் மாணவி கேஜிகேஜி பிரைமரி பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சமூக நிறுவனருக்கு மலரஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.


செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்.

