ஒரத்தூரில் அமைந்துள்ள புதிய அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையினை
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
வேதாரண்யம் பிப் 7
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 12.01.2022 அன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டது. சுமார் 4,080 கோடி செலவில் மத்திய அரசின் நிதியில் 2,145கோடியும், 1,945 கோடி மாநில அரசின் நிதியும், அனைத்து ஆசிரியர்களும் பணி அமர்த்தப்படும் போது மருத்துவக்கல்லூரி வளர்ச்சி மேம்படும். மருத்துவ சேவையும் தற்போதுள்ள நோயாளிகளை திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் நாகப்பட்டினம் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மூத்த மருத்துவர்களை கொண்டு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தற்போது கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை ஒமைக்ரான் தாக்கம் வந்தபிறகு வேகமாக ஏறி ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகளவில் தளர்வுகள் அதிகமாகவும், கட்டுப்பாட்டுகள் குறைவாகவும் உள்ளது. மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. இதுவரை 9.67 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 முதல் 18 வயது வரை இளம் சிறார்களுக்கான தடுப்பூசி 33.46 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சுமார்26 லட்சத்து 72ஆயிரம் நபர்கள் 85மூ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி இரண்டாம் தவணை தொடங்கப்பட்டு 5.47 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டோர்க்கு மே மாதம் தொடங்கி 5.25 கோடி 90.78மூ அதே போல் இரண்டாம் தவணை 4.5 கோடி 70மூ தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியினை முன்களப்பணியாளர்கள், சுகாதாரபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட கூட்டு நோய் உள்ளவர்கள் 34 லட்சம் இலக்கு நிர்ணம் செய்யப்பட்டு அதில் தகுதியுடையோர் 7.17 லட்சம் நபர்களில் இதுவரை 4.82லட்சம் 67மூ பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடப்படுவது தயக்கமுள்ள மாவட்டமாக இருந்ததை மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் அவசியத்தை உணர்த்தி தொடர்ந்து வலியுறுத்தியதால் இதுவரை 84 சதவீதம் முதல் தவணையும் 75சதவீதமும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நம் மாவட்டத்தில் பொதுவாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவச் செல்வங்கள் முதல் தவணை சுமார் 76மூ தடுப்பூசி செலுத்தப்பட்டது தமிழ்நாடு மாநிலசராசரி அளவில் முதல் இடமாகும்.


மேலும், சில இடங்களில் பெரியவர்கள் தடுப்பூசி போடப்படுவது குறித்த தவறான தயக்கங்களில் தடுப்பூசி போடாமல் உள்ளதை மாவட்ட நிர்வாகம் அவர்களின் அச்சத்தை போக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக முதல் அலையில் அதிகம் தாக்கம் இருந்தாலும் இரண்டாம் அலையில் அதைவிட அதிக தாக்கம் இருந்தபோதிலும் மூன்றாம் அலையில் மிக அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளினாலும் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தினமும் பாதிப்புகள் குறைக்கப்பட்டு தற்போது நோய் தொற்று குறைந்துள்ளது. அதாவது 31,000லிருந்து 7,000ஆக பாதிப்பு குறைந்துள்ளதால் பொதுமக்கள் காரணம் இல்லாமல் பொதுஇடங்களில் கூடுதல், கூட்டம் மற்றும் விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். எந்த நேரமும் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.விஸ்வநாதன், மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.விஜயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்.

