வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் வேட்பு மனு கடைசி நாளான இன்று 49 மனுக்கள் வாபஸ் பெற்றனர். 21 வார்டு உறுப்பினர் பதவிக்கு 96 பேர் போட்டி
வேதாரண்யம் பிப் 7
வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளனர். இதில் போட்டியிட 145 பேர் போட்டியிட்ட நிலையில் வேட்பு மனு திரும்ப பெறும் கடைசி நாளில் அதிமுக-21, திமுக-21, பாஜக-1, சுயேட்சை-6 பேர் என 49 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து இறுதியாக வேதாரண்யம் நகராட்சி 21 வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, நாம் தமிழா் கட்சி, திமுக, பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், பாமக, சுயேட்சைகள் என 96 போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்தந்த வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்டச் செய்தியாளா்
வேதாரண்யம்

