*சட்டவிரோதமாக டிராக்டர் மூலம் ஓடை மணல் திருடியவர் கைது – டிராக்டர் மற்றும் ¼ யூனிட் ஓடை மணல் பறிமுதல்.*
*கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் இன்று (28.01.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனாரூத்து பகுதியில் உள்ள ஓடையில் பாலமுருகன் (25), த/பெ. மாடசாமி, தடியம்பட்டி, தென்காசி மாவட்டம் என்பவர் டிராக்டர் மூலம் சட்டவிரோதமாக ஓடை மணலை திருடியது தெரியவந்தது.*
*இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து வழக்குப்பதிவு செய்து எதிரி பாலமுருகனை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரையும், ¼ யூனிட் ஓடை மணலையும் பறிமுதல் செய்தார்.*


