வேதாரண்யம் ஐன 29
இணைப்பு சாலையில் சப்வே அமைத்து தராத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகை பாராளமன்ற உறுப்பினர் செல்வராசு தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாகை மாவட்டம் அகஸ்தியன் பள்ளியிலிருந்து – திருத்துறைப்பூண்டி அகல இரயில் பாதை அமைக்கும் பணியானது 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் செண்பகராயநல்லூர் ஊராட்சியில் உள்ள இருப்பு பாதையில் பாதாள இருப்பு பாதை (sub_way) அமைத்து தரக்கோரியும், சப்வே இல்லாததால் அப்பாதையை பயன்படுத்தி வரும் விவசாயிகள் , பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் செல்ல வழியின்றியும், இறந்தவர்கள் சடலங்கள் கூட கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் இரயில்வே அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் செவி சாய் காத தென்னக இரவிவே நிர்வாகத்தை கண்டித்து நாகை பாராளமன்ற உறுப்பினர் எம். செல்வராசு தலைமையில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் , அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு இரயில்வே நிர்வாகத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

