மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்.
ஜனவரி 29,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருகின்ற நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறையினருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த தடுப்பு முகாமில் காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

