• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம்

policeseithitv by policeseithitv
January 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம்

திருப்பூர்: ஜன-28

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

. தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஐந்தரை ஆண்டுகளாக, தனி அலுவலர்கள் பொறுப்பில் இயங்கின. நீண்ட இடைவெளிக்கு பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், உள்ளாட்சிகளை ஆட்சி செய்ய இருக்கின்றன.

திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டு; ஆறு நகராட்சிகளில், 147 வார்டுகள்; 15 பேரூராட்சிகளில், 233 வார்டுகள் என, 440 வார்டுகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க, 22 தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவியாக, 65 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில், மைய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில், வேட்புமனு தாக்கல் நடக்க உள்ளது. ஆறு நகராட்சிகளிலும், நகராட்சி அலுவலகத்திலும், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களிலும், இன்று முதல் மனுத்தாக்கல் நடக்கிறது.வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி, 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மனுத்தாக்கல் நடக்க உள்ளது. இன்று காலை, ஒவ்வொரு அலுவலகத்திலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், படிவம் -2 வாயிலாக, வார்டுகளுக்கான தேர்தல் அறிவிப்பை முறைப்படி அறிவிக்க உள்ளனர்.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வேட்புமனு படிவத்தை (படிவம் -3) பெற்று, பூர்த்தி செய்து, 20 ரூபாய் முத்திரைத்தாளில் தயாரிக்கப்பட்ட உறுதிமொழி படிவத்துடன் (படிவம் -3ஏ) மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.வேட்பாளர் அல்லது முன்மொழிபவர், வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். மனுவில், இருவரும் கட்டாயம், கையொப்பமிட வேண்டும்.200 மீட்டரில் கட்டுப்பாடுவேட்புமனு தாக்கல் நடக்கும் இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவுக்குள் வேட்பாளரின், இரு வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் நடக்கும் அறைக்குள், வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.யார் மனுத்தாக்கல் செய்யலாம்?சம்பந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள, 21 வயது பூர்த்தியான வாக்காளர், அதே ஊராட்சியின் எந்த வார்டிலும் போட்டியிடலாம்.

போட்டியிடும் வார்டின் வாக்காளர் ஒருவர் முன்மொழிய வேண்டும்; ஒரு வாக்காளர், ஒரு வேட்பாளருக்கு மட்டுமே முன்மொழிவு செய்ய முடியும்.’டிபாசிட்’ தொகைமாநகராட்சி வார்டுக்கு, 4,000 ரூபாய்; நகராட்சிக்கு, 2,000 ரூபாய்; பேரூராட்சி வார்டுக்கு, 1000 ரூபாய் என, ‘டிபாசிட்’ செலுத்த வேண்டும். எஸ்.சி., -எஸ்.டி., வேட்பாளர், இதில், 50 சதவீதத்தை மட்டுமே, ‘டிபாசிட்’டாக செலுத்தலாம். வேட்புமனு படிவம் தயாரானதும், ‘டிபாசிட்’ தொகை செலுத்தி, அதற்கான அத்தாட்சி ரசீது இருந்தால் மட்டுமே, மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் பதிவு செய்த கட்சி வேட்பாளர்கள், படிவம் ‘சி’ வாயிலாக, தாங்கள் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறோம் என்ற அங்கீகார படிவத்தை அளிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர், வேட்புமனு தாக்கலின் போது வழங்கப்படும், 30 வகையான சின்னங்களில் இருந்து, மூன்று சின்னங்களை தேர்வு செய்து, வேட்புமனுதாக்கல் செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வேட்புமனு தாக்கல் நடக்கும் அறைக்குள், வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். முககவசம் அணிந்துஇருந்தால் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சியில், 60 வார்டு; ஆறு நகராட்சிகளில், 147 வார்டுகள்; 15 பேரூராட்சிகளில், 233 வார்டுகள் என, 440 வார்டுகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க, 22 தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு:

ப.மணிகண்ட மூர்த்தி

திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Previous Post

சாத்தான்குளத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா – ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Next Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

Next Post
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In