சாத்தான்குளத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம் பேருராட்சி பண்டாரஞ்செட்டிவிளை தெருவில் பொது நிதி ரூ10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா புனரமைத்து புதியதாக அமைக்கபப்ட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேருராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலர்கள் ஜோசப், பாலமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு, சிறுவர் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பண்டாரபுரம் சாலையில் கனிமொழி எம்பி நிதியில் ரூ98 லட்சம் மதிப்பில் நடந்து வரும் 5 லட்சம் கொள்ளவு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.
பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரரிடம் வலியுறுத்தினார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, லூர்துமணி, சக்திவேல்முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணிஜோசப், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜாக்குலின், சரவணன், இந்திரா, மாவட்ட பட்டதாரி பிரிவு தலைவர் பிளஸ்வீன், வட்டார துணைத் தலைவர் முத்துராஜ்,நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், திருவள்ளுவர் ஆண்கள் சுய உதவிக்குழு தலைவர் சங்கரநாராயணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

