கன்னியாகுமரி மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறைக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் பாராட்டு!!
நாகர்கோவில்,
73-வது குடியரசு தின விழாவையொட்டி 26.01.2022 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கொரோனா காலங்களில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் முன்கள பணியாளர்கள், காவலர்கள், மருத்துவ துறையை சார்ந்தவர்கள் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் வழங்கினார்.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை கொரோனா காலத்தில் கானொலி வாகனம் மூலமும், புகைப்பட கண்காட்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக மேற்கொண்டனர். இதனால் குக்கிராம மக்களும் கொரோனா குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொண்டனர். கொரோனாவை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இந்த விழிப்புணர்வு செயல்பாடு அமைந்தது.
அதன் அடிப்படையில் நேரம்காலம் பாராமல் கொரோனா கால கட்டத்தில் மக்களின் நலனே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட குமரி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையையும், அதில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களான வாகன திரைப்பட இயக்குனர் இளங்கோ, தொழில்நுட்ப உதவியாளர் அருண், மின் உதவியாளர் தினேஷ், வாகன ஓட்டுநர்கள் குமார், சதீஷ் குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவரின் பாராட்டை பெற்ற செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகத் பிரைட் மற்றும் கணக்காளர் சுரேஷ் ஆகியோரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி தொகுப்பு: சுரேஷ்குமார்.

