விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
மாநில இணை அமைப்பாளர் கே.கே.
பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!!
———–
விருதுநகர்,
ஜனவரி 28,
விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி
மாநில இணை அமைப்பாளர் கே.கே
பொன்னையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்டம் தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலைக்கு. காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மதமாற்ற தடை சட்டம் இயற்றப் கோரியும்
நேற்று மாலை தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தளவாய்புரம் இந்து முன்னணி நிர்வாகி எம் .விக்னேஷ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே. யுவராஜ் மற்றும் இரா. வினோத் குமரன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கேகே பொன்னையா ஜி கலந்துகொண்டு கண்டன சிறப்புரையாற்றினார்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தன.
செய்தி: ஸ்ரீவில்லிபுத்துர் தாலுகா நிருபர் ச .காளிமுத்து

