நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேதாரண்யம் ஜன 26
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இந்திய திருநாடு முழுவதும் நாட்டின் 73வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

