மதுரையில் குடியரசு தின விழா.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள். மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர் .அன்பு, அவர்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா அவர்கள் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் அவர்களும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட காவல்துறையில் மெச்சத்தக்க பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்
மதுரை.

