நாகை மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற இலங்கை மீனவர்கள் .
வேதாரணியம்
ஜன 26
நாகப்பட்டிணம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த வசந்தபாலன்,
தில்லைநாதன், மணிகண்டன் , நிர்மல் ஆகிய 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு
இரண்டு படகுகளில் வந்த 8 இலங்கை மீனவர்கள்
கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கியதில்,
வசந்தபாலனுக்கு இடதுகை சுண்டு விரலுக்கு மேலே ஆழமான வெட்டுக்காயமும்
மீனவர் தேவநாதனுக்கு பின் மண்டையில் கட்டையால் அடித்ததால் உண்டான ரத்த காயமும், மீனவர் மணிகண்டனுக்கு வலது முன்கையில் வெட்டுக் காயமும்
மீனவர் நிர்மலுக்கு வலது முழங்கையில் உள் காயமும் ஏற்பட்டுள்ளது.
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள்
நாகப்பட்டினம் மீனவர்கள் படகில் இருந்த யமஹா இன்ஜின், ஜி.பி.எஸ். கருவி , இன்வெர்ட்டர் பேட்டரி , 100 கிலோ மீன்கள் மற்றும் இரண்டு செல்போன்களையும் பறித்துக்கொண்டு சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயம்பட்ட மீனவர்கள் வேதாரணியம் கடற்கரைக்கு வந்து
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
இதில் வெட்டுக் காயம்பட்ட வசந்த பாலனை லேசான காயங்களுடன் உள்ள நிர்மல் என்பவருடன் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற இரண்டு மீனவர்கள்
தில்லைநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது சம்பந்தமாக வேதாரணியம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


மீனவர்களை தாக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதால் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள் து.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

