நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் 12வது தேசிய வாக்காளர் தினவிழா
வேதாரண்யம் ஜன 25
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12வது தேசிய வாக்காளர் தினவிழா வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்தல், தேசிய வாக்காளர் தினம் குறித்து பாட்டுப் போட்டி, கட்டுரை போட்டி, தேர்தல் குறித்த சுலோகன் எழுதுதல், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, நடனம், வினாடி வினா போன்ற ஏழு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி அலுவலர்களை கௌரவித்தல் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
நம் நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் முதன் முதலாக 1950ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 25ஆம் நாள் உருவாக்கப்பட்டது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இந்நாளினையே அடிப்படையாக கொண்டு 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 12வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களிடமும் தேர்தல் அதன் நடைமுறைகள், ஓட்டுபதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேர்தலின் மீது நம்பிக்கையும், வாக்குப் பதிவையும் அதிகரிப்பது தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் ஒரு கருப்பொருளை அறிவித்து அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் தேர்தல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் பங்கேற்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த வருட கருப்பொருள் “அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தேர்தல்களை உருவாக்குவோம்”எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வசதி, வாக்களிக்க தேவையான வசதிகளை மேம்படுத்துதல் போன்றவைகளையும் பழைய ஓட்டுசீட்டு முறையை மாற்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை தேசியகொடி நிறத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அட்டையில் இன்று முதல் கியூ ஆர் கோடு வசதியும் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ;அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன், முதன்மை கல்விஅலுவலர் மதிவாணன், தேர்தல் வட்டாட்சியர் பிரான்சிஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டா் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

