வேதாரண்யம் வட்டத்தின் சிறந்த வாக்குச்சாவடி அலுவலராக வடிவழகி தேர்வு
வேதாரண்யம் ஜன 25
வேதாரண்யம் அடுத்த சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவழகி. இவரது கணவர் செல்வராஜ் தேசிய நல்லாசிரியர் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றியமைக்காக வாக்குசாவடி அலுவலராக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் பரிந்துரைத்த வேதாரண்யம் வட்ட தேர்தல் வட்டாட்சியா் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

