சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழா –அமுத பெருவிழா
வேதாரண்யம் ஜன 25
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டத்தில் இந்திய நாட்டின் சுதந்திரத் திருநாள் 75ஆம ஆண்டு விழா அமுத பெருவிழாவை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக உன்னத பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் டாக்டா் வேல்முருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குருகுலம் நிர்வாகியும், சுதந்திர போராட்டத் தியாகி சர்தார் வேதரத்னம் பிள்ளையின் பேரன் வேதரத்தினம், நாகப்பட்டினம் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் பன்னீர்செல்வம், வேதை உப்பு தொழிலாளா்கள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ,எம்.பி.திரு. பி.வி.ராஜேந்திரன், வேதை ப்ரியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநா் பிரபு, வேதை சிம்காஸ் பனங்கிழங்கு உணவுகள் உற்பத்தியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அமுதபெருவிழா கூட்டம் நடந்தது.


பின்னர் உப்புத்துறை அலுவலகம் மற்றும் உப்பு சத்தியகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கிருஷ்ணன் ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடம் மற்றும் நினைவு ஸ்தூபியில் மலரஞ்சலி செலுத்தினார். நிறைவாக இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் சேக்தாவூது நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

