ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி சார்பில் இன்று 26.01.2021 குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இலக்கியா ராமு அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை வைத்து தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்.ராமு பங்கேற்றார். மேலும், ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.மகாலிங்கம், வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு மங்களேஸ்வரி, 2வது வார்டு கே.ராமகிருஷ்ணன், 3வது வார்டு எம்.விஜயசாந்தி, 4வது வார்டு எம்.சூர்யா, 5வது வார்டு கே.மரகதம், 6வது வார்டு பி.விஜயலட்சுமி, 8வது வார்டு பி.குணசேகரன், ஊராட்சி மன்ற செயலாளர் என்.ஆர்.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி: மங்கலகுடி அபுபக்கர் சித்திக்

