72வது குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்திய திருநாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார்கள்.

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கிங் எம்.கண்ணன், மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொருளாளர் கே.எஸ்.முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் தலைமைச்செயலக பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினர். பின்னர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடந்த 16ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் வழிகாட்டுதலின்படி மாநில செயலாளர் லயன் டாக்டர் காஞ்சி கே.முத்து தலைமையில் காஞ்சிபுரத்தில் 500 ஏழை-எளிய மக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 72வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2021) காலை தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்க மண்டல அலுவலகமான காஞ்சிபுரத்தில் மாநில செயலாளர் லயன் டாக்டர் காஞ்சி கே.முத்து இந்திய தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் வடிவேலு அவர்கள் முன்னிலை வகித்து மாணவ-மாணவியர்களுக்கு; நோட்-புக் மற்றும் டிபன்-பாக்ஸ் வழங்கினார். ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், சிறந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.



இந்த விழாவை காஞ்சி லயன் டாக்டர் கே. முத்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். ஞானசம்பந்தம் சட்ட ஆலோசகர் மற்றும் மண்டல நிர்வாகிகள் த. காஞ்சி சரவணா மண்டல தலைவர். பா. மணிகண்டன், S.மணிகண்டன், K.கணேஷ், B.அஜித்குமார், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள். டாக்டர் S.சுரேஷ் மாவட்ட தலைவர், S.B.வேலு, V.கமல்தாஸ், சிவசிதம்பரம், N.தட்சணாமூர்த்தி, v.பிரகாஷ், v.மேகநாதன், D.ரத்தினவேல், D.பாலா, N.பாலாஜி, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள். k.ஜேம்ஸ், வடசென்னை மாவட்ட தலைவர், J.டான்பாஸ்கோ, S.ராஜா, V.முருகன் , மகளிர் அணி M.ராஜேஸ்வரி, ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
செய்தி தொகுப்பு: த. காஞ்சி சரவணா

