தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை
தேனி மாவட்டம்
பூமலைகுண்டு, 24.01.2022
தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் முழு சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் 2011-12 ஆண்டில் ஆறு லட்சங்கள் மதிப்பீட்டில் அரசால் பெண்கள் சுகாதார வளாகம் ஒன்று உருவாக்கப்பட்டது இந்த ஊராட்சியில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாததால் பெரும்பாலான பெண்மணிகள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர் சில வருடங்களாக இந்த சுகாதார வளாகம் பூமலைகுண்டு ஊராட்சி அலுவலகத்தால் பராமரிப்பு இல்லாமல் போகவே தண்ணீர், மின்விளக்கு ,சுகாதாரம் அற்றுப் போயிற்று, இதனால் சுகாதார வளாகம் அமைந்துள்ள சாலையின் இரு மருங்கிலும் பெண்கள் கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பூமலைகுண்டு ஊராட்சி அலுவலகத்திடம் பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர் இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் பூமலைகுண்டு பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் தொற்றும் அபாயமும் திறந்த வெளியை பெண்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் பூமலைகுண்டு கிராமம் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படும் அவலநிலை ஏற்படும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர் மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்
தேனி மாவட்ட செய்தியாளர், கா. இலியாஸ் ராஜா

