கோவில்பட்டி அருகே சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சீதாலட்சுமி (68). இவர் நேற்று தனது வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. இதில் அவரது சேலையில் தீப்பற்றி தீக்காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

