திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் ஜன 25,
காரணம்பேட்டையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வை வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு அறிவித்த கூலி உயர்வை அமுல்படுத்த கோரியும், 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்க கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையிலுள்ள காரணம் பேட்டை பேருந்து நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ரெங்கசாமி, மின்சாரவாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ.சரவணன், அமைப்புசார தொமுச தலைவர் ரத்தின சாமி, ஏ ஐ டி யூ சி மாவட்ட பொது செயலாளர் என். சேகர், ஐஎன்டியூசி செயலாளர் சிவசாமி, சி ஐ டி யூ முத்துசாமி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் திருப்பூர் பெருமாநல்லூர், பல்லடம், மங்கலம், அவினாசி, தெக்கலூர், கண்ணம்பாளையம், புதுப்பாளையம், 63 வேலம்பாளையம், உள்ளிட்ட கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், என பலரும் கலந்து கொண்டனர்.
ப.மணிகண்ட மூர்த்தி. மாவட்ட செய்தியாளர் திருப்பூர்.

