• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனுக்கு எலிமருந்து கொடுத்து கொலை ?- வேதாரண்யம் அருகே பரபரப்பு

policeseithitv by policeseithitv
January 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனுக்கு எலிமருந்து கொடுத்து கொலை ?- வேதாரண்யம் அருகே பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனுக்கு எலிமருந்து கொடுத்து கொலை ?- வேதாரண்யம் அருகே பரபரப்பு

வேதாரண்யம்
ஜன 23
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன் காடு முகவரியைச் சேர்ந்த தேவேந்திரன் ( 47) என்பவர் கடந்த நவம்பர் மாதம் முதல் மஞ்சள் காமாலை மற்றும், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் 15 ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவமனை மருத்துவர் உடல் நிலை நன்றாக உள்ளது என தெரிவித்ததாக தெரிகிறது.

கடந்த 04 ம் தேதி மாலை மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் உடன் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறியதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையிலிருந்தவர் கடந்த 6ம் தேதி காலை 03.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இறந்த தேவேந்திரனின் பிரேதம் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் இறந்த தேவேந்திரனின் மனைவி சூர்யா ( 26 ) என்பவர் தேவேந்திரன் இறப்புக்கு பின்பு தினமும் தனிமையில் அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த தேவேந்திரனின் உறவினரான
சதீஷ்கண்ணா என்பவர் தேவேந்திரன் மனைவியின் அலைபேசியை ஆய்வு செய்ததில் தேவேந்திரன் மனைவி சூர்யாவிற்கும், தேவேந்திரன் வீட்டில் கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன்
என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வருவதை கண்டறிந்து, தேவேந்திரன் உறவினர்கள் சந்திரசேகரனை அழைத்து விசாரணை செய்த போது சந்திரசேகரன் தனக்கும், சூர்யாவிற்கும் கடந்த 3 மாத காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதாகவும், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலை, தேவேந்திரன் சாப்பிட்ட சாப்பாட்டில் (சாம்பாரில்) எலி பேஸ்டை கலந்ததாகவும், தான் கலந்தது அவரது மனைவி சூர்யாவிற்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

தேவேந்திரன் எலி பேஸ்ட் உட்கொண்டதால் தான் இறந்துள்ளார் எனவும், எலி பேஸ்ட்டை சாம்பாரில் கலந்த சந்திரசேகரன் என்பவரை வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் நேற்று அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
தேவேந்திரன் மனைவி சூர்யா கைது செய்யப்பட்டு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதலனோடு சேர்ந்து
கணவனுக்கு
எலிமருந்து கொடுத்து கொலை செய்த
சம்பவம் இந்த
பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

தந்தைக்கு முதல் மரியாதை! பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் செயலால் திண்டுக்கல் திமுகவினர் உற்சாகம்

Next Post

கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்!

Next Post
கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்!

கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In