கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்!
சாக்கடைகழிவுநீர் அகற்றப்படாமல் மெத்தன போக்கு
கம்பம் ஜனவரி 24
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சுப்புரமணியன்
கோவில்தெருவில் சாக்கடைகழிவுநீர் தேங்கி இருப்பதால் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கம்பம் நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவேடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இது இறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்

