குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி செயல்படுமா?
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி செயல்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மார்பக கட்டிகள் மற்றும் புற்றுநோய் கண்டறியும் கருவி செயல்பட்டு வந்தது தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கருவி செயல்படாமல் இருந்து வருகிறது இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு வரும் நோயாளிகள் வெளியிடங்களில் பணம் செலுத்தி மேமோகிராம் எடுத்து வர நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர் இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத மிகச்சிறந்த வசதியாக அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையங்களில் இவ்வசதி உள்ளதாக தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறி வருகின்றனர் இந்நிலையில் குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்பக கட்டி மற்றும் புற்றுநோய் நோயாளிகள் வந்து சிகிச்சைக்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர் ஆகவே இதனை தமிழக முதல்வர் மற்றும் நலத் துறை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் எய்ம்ஸ் அறக்கட்டளை சார்பிலும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ஆகவே இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக மேமோகிராம் செய்யும் எந்திரத்தை மீண்டும் செயல்படுத்தி குமரி மாவட்ட பெண்களின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

