சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் 24 மணி நேரத்தில் துரிதமாக செயல் பட்டு கொலையாலிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகுளம் காவல்துறையினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார். பின்பு முதல் கட்ட விசாரணையில் குப்பை தொட்டியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயம் மற்றும் உடம்பு முழுவதில் கம்பி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து பின்பு குப்பை தொட்டியில் போட்டு தீ இட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுனர்கள் ஆய்வில் தெரியவததை தொடர்ந்து குப்பைதொட்டியில் எரிக்கப்பட்டு உயிரிளந்த நிலையில் கிடந்த ஆண் அதே ஊரை சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் முதல் மனைவி ராஜம்மாளின் மகன் செந்தில் (வயது 50) என்பது கண்டுபிடிக்கபப்பட்டது. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாய் உயிரிலந்த நிலையில் ஊரை விட்டு வெளியே சென்றவர் பல்வேறு மாநிலங்களில் சாமியாராக கோவில்களில் வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுத்திற்கு வந்த நிலையில் அவரது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்றதாகவும், விற்பனை செய்த சொத்தில் அவரின் தந்தையின் இரண்டாவது மனைவியான ரத்தினகிரி (வயது 58) அவரது மகன் செல்வகுமார் (வயது 43) சொத்து விற்றதில் பங்கு கேட்ட நிலையில் பங்கு தரமறுத்ததால் செந்திலை ரத்தினகிரியும் அவரது மகன் செல்வக்குமாரும் சேர்ந்து வெட்டி கொலை செய்து பின்பு உடலை ஊரின் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர் எனபது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட செந்திலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க பெட்ரோல் வாங்கி கொடுத்த ரத்தினகிரியின் உறவினரான லோகநாதன்,(வயது 37) மற்றும் கொலை செய்ய பண்படுத்திய அரிவாள் மற்றும் கொலையாளிகள் இருவருக்கும் தோட்டத்தில் தங்க வைத்து அடைகளம் கொடுத்த செல்வகுமாரின் நண்பரான செல்வம் (வயது 45) என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்முலம் தொடர் விசாரணையில் கணவரின் முதல் மனைவியின் மகன் பெயரில் இருந்த சொத்தில் பங்கு கேட்டு தராததால் தாயும், மகனும் சேர்ந்து கணவரின் மூத்த மனைவியின் மகனை வெட்டி கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கொலை செய்த தாய் மற்றும் மகன் அதற்கு உடந்தையாக இருந்த இரண்டு நர்கள் உட்பட மொத்தம் 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொளையாலிகளை பெரியகுளம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
சொத்தில் பங்கு கேட்டு தராத நிலையில் கணவரின் முதல் மனைவியின் மகனை இரண்டாவது மனைவியான தாயும் மகனும் சேர்ந்து வெட்டி கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சமபவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்டு கிடந்த ஆண் உடல் அடையாளம் காணப்பட்டு கொலையாலிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து பெரியகுளம் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். விரைவாக செயல்பட்ட பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்

