மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறையினர்.
மதுரையில் முககவசம் அணியாமலும் முறையாக அணியாமலும் வந்தவர்களுக்கு விழிப்புணர்வை போக்குவரத்து காவல் துறையினர் செய்தனர்.
மதுரை தெற்காவணிமூல வீதியில் முககவசம் அணியாமலும் முறையாக முக கவசம் அணியாமல் வந்தவர்களை அழைத்து அவர்களுக்கு புது முககவசத்தை அளித்து முககவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்த சீரிய பணியை தெற்கு வாசல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நவநீதன் தலைமையில் தலைமை காவலர்கள் ரவிக்குமார், ஹரிஹரன், முதல் நிலை காவலர்கள் சிவக்குமார், சண்முக வேல் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முககவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக முககவசத்தை அப்பகுதியில் அளித்தனர்.
சு.இரத்தினவேல்
செய்தியாளர்
மதுரை.

